BREAKING NEWS   Over RM15 billion in financing support provided to micro, small and medium enterprises this year - MoF | 
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

2026 உலகக் கிண்ணப் போட்டி: ஆர்.டி.எம் & யுனிஃபை டிவி வழியாக கண்டு மகிழலாம்

13/05/2026 05:57 PM

கோலாலம்பூர் , மே 13 (பெர்னாமா) -- யுனிஃபை , CelcomDigi மற்றும் UMobile ஆகிய மூன்று முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உடனான வியூக ஒத்துழைப்பின் மூலம், 2026 ஃபிபா உலகக் கிண்ணத்தின் 104 ஆட்டங்களை ஆர்.டி.எம் மற்றும் யுனிஃபை டிவி வழியாக மக்கள் கண்டு மகிழலாம்.

உலக கிண்ணப் போட்டியின் ஒளிபரப்புகளுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் எவ்வித கூடுதல் செலவுமின்றி உலக தரம் வாய்ந்த அந்த போட்டியின் ஒளிபரப்பை அனைத்து மக்களும் கண்டுகழிக்க முடியும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

தரமான உள்ளடக்கங்களை மக்கள் எளிதில் அணுகுவதை விரிவுப்படுத்துவதற்கும், தேசிய ஒற்றுமையின் ஊடகமாக விளையாட்டை பயன்படுத்துவதற்கும் மடானி அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையை இம்முயற்சி பிரதிபலிப்பதாக, டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

"அனைத்து 104 ஆட்டங்களும் ஆர்.டி.எம் மற்றும் யுனிஃபை டிவி-யில் ஒளிபரப்பப்படும் என்பதை இன்று நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றேன். எனவே, இரண்டுமே மொத்தம் 104 ஆட்டங்களை ஒளிபரப்பு செய்யும்," என்றார் அவர்.

2026-ஆம் ஆண்டு ஃபிபா உலகக் கிண்ணப் போட்டி, MyTV வழியாக இலவசமாகவும், ஆர்.டி.எம் Klik மற்றும் யுனிஃபை TV வழியாக OTT தளங்களில் ஒளிபரப்பப்படும் என்று அவர் கூறினார்.

மெக்சிகோ மற்றும் கனடாவுடன் இணைந்து அமெரிக்கா ஏற்று நடத்தும் 2026-ஆம் ஆண்டு ஃபிபா உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் தொடக்க ஆட்டம் ஜூன் 11-ஆம் தேதி மெக்சிகோவிலும் இறுதிப் போட்டி ஜூலை 19-ஆம் தேதி நியூ ஜெர்சியிலும் நடைபெற உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)