Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

தீ விபத்தில் மாற்றுத்திறனாளிப் பெண் பலி

13/05/2026 03:02 PM

ஷா ஆலம், மே 13 (பெர்னாமா) -- இன்று அதிகாலை பேராக் பாரிட் புந்தார்அருகே, பாகான் தியாங்கில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது தாயார் காயமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து அதிகாலை மணி 2.34-க்கு தமது தரப்பு அழைப்பு கிடைத்ததாக பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீ விபத்தில் இரண்டு மாடி வீடு சுமார் 70 விழுக்காடு சேதமடைந்ததோடு புரோட்டான் ஐரிஸ் Iriz ரக கார் ஒன்றும் தீக்கிரையாகியதாக சபரோட்ஸி கூறினார்.

48 வயதுடைய அந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணின் சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரு கால்களிலும் காயமடைந்த 71 வயதான அவரது தாயார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)