Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

டிவெட்; முக்கியத்துவமும் வாய்ப்புகளும்

08/05/2026 05:56 PM

கோலாலம்பூர், மே 08 (பெர்னாமா) -- டிவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திட்டம் மலேசியாவில் மட்டுமல்லாது உலகளாவிய அளவிலும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மலேசிய அரசாங்கம் மற்றும் அரசு சாரா இயக்கங்களின் பல்வேறு திட்டங்கள் வழியாக, அப்பயிற்சி திட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்திய சமுதாய மாணவர்களும் இத்துறையில் உள்ள கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று மலேசிய உயிரியல் தொழில்நுட்ப தகவல் மையத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் மஹாலட்சுமி அர்ஜுனன் தெரிவித்தார்.

இன்றைய காலக்கட்டத்தில் கல்வியில் ஆர்வம் குறைவாக இருக்கும் பெரும்பாலான மாணவர்கள் வேலை சந்தையில் நுழைகின்றனர்.

அவர்களுக்கு கைகொடுக்கும் ஒரு தளமாக டிவெட் பயிற்சி திட்டம் அமைகிறது என்று முனைவர் மஹாலட்சுமி அர்ஜுனன் விளக்கினார்.

இதனிடையே, இப்பயிற்சி திட்டம் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்ற விழிப்புணர்வு இந்திய சமுதாயத்திலும் அதிகரித்துள்ளது.

எனினும், கல்வியில் சிறந்த தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கான பயிற்சி திட்டம் என்ற கண்ணோட்டத்தில் டிவெட் பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பம் வளர்ச்சிக் கண்டு வரும் இன்றைய உலகில் அது தவறான கண்ணோட்டம் என்று சுட்டிக் காட்டிய முனைவர் மஹாலட்சுமி, அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

டிவெட் துறையில் சான்றிதழ், டிப்ளோமா என்று கல்விக்கான படிநிலைகள் உள்ளன.

மாணவர்களின் தேர்வு முடிவுகளைப் பொருத்தே அந்தப் படிநிலைகள் நிர்ணயிக்கப்படும்.

எனினும், கல்வியில் சிறந்த தேர்ச்சிப் பெற்று மேற்கல்வியைப் பெற்று பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களை விட, டிவெட் மாணவர்கள் தங்களது மேற்கல்வியை முடிப்பதற்கு சற்று கால அவகாசம் நீடிக்கும் என்கிறார் முனைவர் முனைவர் மஹாலட்சுமி.

''சான்றிதழ், டிப்ளோமா, இயங்கலை என்று படிப்படியாக டிவெட் கற்க முடியும். அதில் வெற்றிப் பெற்ற இந்தியர்களும் சமுதாயத்தில் அதிகம் இருக்கின்றனர், '' என்றார் அவர்.

நீடிக்கப்பட்டுள்ள அந்த கால அவகாசமும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில், பெர்னாமாவின் பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இத்தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)