Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

102 முயற்சிகளை உள்ளடக்கிய 2026-2030 தேசிய சமூகக் கொள்கை செயல் திட்டம் அறிமுகம்

07/05/2026 06:30 PM

கோலாலம்பூர், 07 மே (பெர்னாமா) -- மக்களின் சமூக நலனை வலுப்படுத்தும் நோக்கில், தடுப்பு, வலுப்படுத்துதல், விளம்பரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய நான்கு முக்கியக் கூறுகளை மையமாகக் கொண்ட 102 முயற்சிகளை உள்ளடக்கிய 2026-2030 தேசிய சமூகக் கொள்கை செயல் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில், 2024-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய சமூகக் கொள்கையின் அடிப்படைக் கூறுகளை இந்தச் செயல் திட்டம் செயல்படுத்தும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்

''இந்த 2026–2030 தேசிய சமூகக் கொள்கை செயல் திட்டம், நாங்கள் வகுத்துள்ள கொள்கைகளுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் இடையே ஒரு பாலமாக அமைய வேண்டும். உதவிகள் ஒன்றுடன் ஒன்று சார்ந்திராமன் இருப்பதையும், தகவல்கள் துண்டிக்கப்படாமல் இருப்பதையும், நலிவடைந்த குழுக்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதையும், ஒவ்வொரு தலையீடும் உண்மையிலேயே தேவையுள்ளவர்களைச் சென்றடைவதையும் இது உறுதி செய்ய வேண்டும்,'' என்றார் அவர்.

வியாழக்கிழமை, செயல்திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய Datuk Seri Dr. Ahmad Zahid, உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய புதிய அபாயங்களான தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் இணையவழி அச்சுறுத்தல்கள் குறித்தும் குறிப்பிட்டார்.

எனவே, இந்தத் திட்டத்தின் செயலாக்கம், வெறும் உதவி வழங்குவதிலிருந்து மாறி, மக்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும், ஒருங்கிணைந்த மற்றும் அதிக தடுப்பு நடவடிக்கைகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பம் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)