Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஏ.ஆர்.எம் ஹொல்டிங்ஸ் நிறுவனம் & பொருளாதார அமைச்சு தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது

06/05/2026 04:50 PM

புத்ராஜெயா, 06 மே (பெர்னாமா) --  பிரிட்டனைச் சேர்ந்த ஏ.ஆர்.எம் ஹொல்டிங்ஸ் நிறுவனத்திற்கும், பொருளாதார அமைச்சிற்கும் இடையே SEMICONDUCTOR எனப்படும் மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறையில் ஏற்பட்ட ஒரு வியூக ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான 11 கோடி மதிப்புள்ள முதலீடு குறித்த வழக்கு விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.

விசாரணைக்கு உதவுவதற்காக முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லி மற்றும் அரசியல் ஆய்வாளர் சாய் ஜின் ஷெர்ன் அல்லது ஜேம்ஸ் சாய் ஆகியோர் உட்பட இதுவரை 22 சாட்சியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

''என்னைப் பொறுத்தவரை இந்த விசாரணை ஏறக்குறைய முடிந்துவிட்டது. இதுவரை நாம் இரண்டு சரியான சாட்சிகளை மட்டும் பதிவு செய்தால் போதும். அதாவது, ஒருவர் தைவானிலும் மற்றொருவர் உள்நாட்டிலும். மற்றவர்கள் பிறகு. என்னைப் பொறுத்தவரைக் கூடிய விரைவில் விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். வழக்கு உள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது துணை அரசு வழக்கறிஞரின் பொறுப்பு'', என்று அவர் கூறினார்.

இவ்வழக்கில் இதுவரை இரண்டு நபர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பரிந்துரைக்க எஸ்.பி.ஆர்.எம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அதை தீர்மானிப்பது தலைமை வழக்கறிஞரின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, குற்றஞ்சாட்டப்படவிருக்கும் அந்த இரு நபர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதனை வெளியிட அசாம் பாக்கி மறுத்து விட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)