வாஷிங்டன் டீ.சி, மே 02 (பெர்னாமா) -- ஈரான் முன்மொழிந்திருக்கும் அண்மைய சமாதானத்தில் தமக்குத் திருப்தி இல்லை என்று கூறியிருக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தம்மால் ஏற்றக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அந்த இஸ்லாமிய குடியரசின் பேச்சாளர் முன்வைப்பதாக குற்றம் சாட்டினார்.
"ஆழமாகப் பிளவுபட்டுள்ளது" என்று விவரிக்கப்பட்டிருக்கும் ஈரானியத் தலைமைத்துவமிடமிருந்து ஒரு ஒருங்கிணைந்த பதிலுக்காக வாஷிங்டன் காத்திருக்கும் வேளையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக, தெஹ்ரான் பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களுக்கு புதிய முன்மொழிவுகளை அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பின்போது, டிரம்ப் அந்தக் கூற்றை வெளியிட்டார்.
எதில் உடன்பாடு எட்டவில்லை என்பதைத் தெளிவுபடுத்தக் கேட்டபோது, ஈரானின் அண்மைய பரிந்துரை குறித்து டிரம்ப் மேலும் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.
ஹோர்முஸ் நீரிணை மீதான தமது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதற்கான ஈரானின் முயற்சிகள் மற்றும் ஈரான் தனது அணுசக்தி கொள்கைகளை கைவிட்டு...
குண்டுகள் தயாரிக்கக்கூடிய uranium உலோகக் கையிருப்பை ஒப்படைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகள் தொடர்பில் நிலவி வரும் கருத்து வேறுபாடுகளை இரு தரப்பினரும் களைய முயன்று வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)