Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரானுக்கு எதிரான போர்; 2,500 கோடி டாலரை அமெரிக்கா செலவு

30/04/2026 05:06 PM

வாஷிங்டன் டி.சி, ஏப்ரல் 30 (பெர்னாமா) -- ஈரானுக்கு எதிரான போருக்கு இதுவரை 2,500 கோடி டாலரை, அமெரிக்கா செலவிட்டுள்ளது.

அந்தத் தொகையில் பெரும்பகுதி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்களுக்கான செலவினங்களாகும் என்று, அந்நாட்டின் தலைமை நிதி அதிகாரி ஜூல்ஸ் டபிள்யூ. ஹர்ஸ்ட் III  தெரிவித்தார்.

"ஆகவே, 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' திட்டத்திற்காக ஏறக்குறைய இன்றுவரை நாங்கள் சுமார் 2,500 கோடி அமெரிக்க டாலரை செலவிட்டுள்ளோம். அதில் பெரும்பகுதி வெடிமருந்துகளுக்காகச் செலவிடப்படுகிறது. அதன் ஒரு பகுதி பராமரிப்பு, இயக்கச் செலவுகள் மற்றும் உபகரணங்களை மாற்றுவதற்காகவும் பயனபடுத்தப்பட்டுள்ளது. இந்த மோதலின் செலவு குறித்த முழுமையான மதிப்பீட்டைப் பெற்றவுடன், வெள்ளை மாளிகையின் மூலம் ஒரு துணை நிதி ஒதுக்கீட்டை நாங்கள் உருவாக்கி, அந்நிதி காங்கிரஸ் தரப்பிடம் சமர்ப்பிக்கப்படும்.," என்றார் அவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)