கோலாலம்பூர், ஏப்ரல் 28 (பெர்னாமா) -- உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் அதிகரித்து வரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள எந்தவொரு நாட்டிற்கும் அல்லது பொருளாதாரத்திற்கும் அரசியல் நிலைத்தன்மை இன்றியமையாதது.
அரசியல் நிலைத்தன்மை இன்றி ஒரு நாடு எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் பொருளாதார முன்னுரிமைகள் மற்றும் மக்களின் நலனில் கவனம் செலுத்தவும் கடினத்தைச் சந்திக்கும் என்று முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர், டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானிகூறினார்.
"அரசியல் நிலைத்தன்மை இல்லையென்றால், இந்தச் சவால்கள் அனைத்தையும் சமாளிப்பது மிகவும் கடினம்," என்றார் அவர்.
இன்று விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற ‘War and Tariffs: Our Response’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை வழிநடத்திய மலேசிய தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமாவின் தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சூன் வொய் எழுப்பிய கேள்விக்கு ஜொஹாரி அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)