கோலாலம்பூர், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- இவ்வாண்டு இதுவரை, வெப்ப வானிலை தொடர்புடைய 41 நோய்ச் சம்பவங்கள் பதிவாகியிருக்கும் வேளையில், அவற்றில் பெரும்பாலானவை வெப்ப சோர்வு சம்பவங்களாகும்.
அந்த எண்ணிக்கையில், 35, வெப்ப சோர்வு, உடல் உழைப்பின் காரணமாக ஏற்பட்ட மூன்று வெப்ப பக்கவாதம், மூடப்பட்ட வளாகங்களில் ஏற்பட்ட இரண்டு வெப்ப பக்கவாதம் மற்றும் ஒரு வெப்பத் தசைப்பிடிப்பு சம்பவம் ஆகியவை அடங்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
''மேலும், ஏப்ரல் 24, நேற்று, வெப்ப வானிலை தொடர்பான பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், 2026-ஆம் ஆண்டிற்கான வெப்ப வானிலை தொடர்பான நோயின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 41 ஆகவே நீடிக்கிறது,'' என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில், மக்களுடனான Rewang எனும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சுல்கிஃப்ளி அவ்வாறு கூறினார்.
இன்று காலை மணி 6 நிலவரப்படி, ஐந்து மாநிலங்களில் முதலாம் நிலை வெப்ப வானிலை அல்லது பாதுகாப்பு நிலை பதிவாகியுள்ளது.
அதோடு, கிளந்தானில் உள்ள மாச்சாங் மாவட்டம், இரண்டாம் நிலை வெப்ப வானிலை அல்லது வெப்ப அலை பதிவு செய்துள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]