Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

எரிபொருள் நெருக்கடி: டீசல் வாகனங்களுக்கான சாலை வரியை குறைக்க பரிசீலிப்பீர்

25/04/2026 05:11 PM

செபெராங் பிறை, 25 ஏப்ரல் (பெர்னாமா) -- தற்போதைய உலகளாவிய எண்ணெய் விநியோக நெருக்கடியைத் தொடர்ந்து, டீசல் வாகனங்களுக்கான சாலை வரி விகிதங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஆராயுமாறு போக்குவரத்து அமைச்சிற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

''டீசல் பிரச்சனை பற்றிக் கேள்விப்பட்டபோது, ​​ஒரு தீர்வைக் காண்பதற்காகப் போக்குவரத்து அமைச்சர் லோக்-உடன் நான் கலந்துரையாடினேன். மேலும், எதிர்காலத்தில் டீசல் வாகனங்களுக்கான சாலை வரியைக் குறைக்க இப்போதே ஒரு வழியைக் கண்டுபிடிக்குமாறு போக்குவரத்து அமைச்சு மற்றும் கே..எஸ்.யூ-வைக் கேட்டுக் கொண்டேன். தற்போதைய எண்ணெய் விலையைக் குறைக்க முடியாது. ஆனால் சாலை வரியை நம்மால் குறைக்க முடியும்,'' என்றார் அவர்.

மலேசியாவில் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 18 லட்சமாக இருந்தாலும்,  எரிபொருள் விலை உயர்வால் டீசல் வாகனப் பயனர்கள் நிச்சயமாக பாதிப்படந்தால், இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் கவனம் தேவை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ரோன்95 பெட்ரோலுக்கான உதவித் தொகை, பெரும்பான்மையான மக்களுக்குப் பயனளிப்பதால், தற்போதைக்கு அது தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]