Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் பதவிக்கான பெயர் பட்டியல் மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டது

24/04/2026 06:34 PM

ஜோகூர், 24 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் பதவிக்கான பெயர் பட்டியல், இன்று, வெள்ளிக்கிழமை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்கூறினார்.

நாட்டின் ஊழல் எதிர்ப்பு ஆணையத்தை வழிநடத்தத் தகுதியுள்ளவர்களின் பெயர்கள், இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மன்னரின் பரிசீலனைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ள பெயர்களின் எண்ணிக்கை குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, ​​டத்தோ ஶ்ரீ அன்வார் நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

''தகுதி பெற்றவர்கள், தகுதி பெற்றவர்கள் 120 (சமர்ப்பிக்கப்பட்ட பெயர் பட்டியல்),'' என்றார் அவர்.

வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றுவதற்காக Bandar Permas Jaya பள்ளிவாசலுக்கு செல்வதற்கு முன்னர் அன்வார் சுருக்கமாகப் பேசினார்.

மேலும் விவரித்த அவர், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியிடப்படாது என்றும், பின்னர் மட்டுமே அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

முன்னதாக, சுல்தான் இப்ராஹிமும் ஜோகூரின் இடைக்கால சுல்தான் Tunku Mahkota Ismail-லும் பிரதமரைச் சந்தித்தாக அம்மாநில பட்டத்து இளவரசரின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)