புத்ராஜெயா, ஏப்ரல் 20 (பெர்னாமா) -- குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு மாற்றாக, சமூக சேவை வடிவிலான இழப்பீடு அல்லது நஷ்டஈடு வழங்குவது குறித்து ஒரு சிறப்பு நடுவர் மன்றத்தின் மூலம் பரிசீலிக்கப்படலாம்.
வழங்கப்படக்கூடிய இழப்பீட்டின் வகை குறித்த ஆய்வை, குறிப்பாக அது தனிநபர்களை உள்ளடக்கியதாக இருந்தால், பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று சட்டம் மற்றும் கழகச் சீர்த் திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் தெரிவித்தார்.
இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆற்றலையும் ஆராய வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
"என்னைப் பொறுத்தவரை, சட்ட சீர்த்திருத்தக் குழு அல்லது குற்றவியல் சட்ட மறுஆய்வுக் குழுவில் இழப்பீடு தொடர்பான இந்த விவகாரத்தை நாங்கள் பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். உதாரணமாக, நான் முன்பு லாரி வழக்கில் குறிப்பிட்ட கழக மனிதக்கொலை பற்றிக் குறிப்பிட்டேன். ஓட்டுநர் மிகவும் கவனக்குறைவாக இருந்த பேருந்து தொடர்புடைய வழக்கும் இதில் அடங்கும். நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒருவேளை நிறுவனம் பொறுப்பேற்றால், அது சிறைக்குச் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. சரி, இயக்குநர் குழு உறுப்பினர்கள் சிறைக்குச் செல்லலாம். ஆனால், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தால், அந்த இழப்பீடு என்பது ஒரு தொகுப்பு ஒப்பந்தத்தின் ஒரு வடிவமாக, ஒருவேளை நஷ்டஈடாகக் கருதப்படுகிறது," என்றார் அவர்.
குற்றச்செயலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கோரும் இழப்பீடுகளுக்காக ஒரு சிறப்பு நடுவர் மன்றம் அமைக்கும் பரிந்துரையை தேசிய சட்டத்துறை அலுவலகம் ஆராய்ந்து வருவதாக வெளியான ஊடகச் செய்திகள் குறித்து கருத்துரைத்தபோது அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)