ஷா ஆலம், ஏப்ரல் 17 (பெர்னாமா) -- சிலாங்கூர் மாநில மலேசிய குடிநுழைவுத் துறை மேற்கொண்ட Ops Gegar நடவடிக்கை வழி, ஷா ஆலமில் உள்ள புக்கிட் ரிமாவ்
சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் சில உடம்புப் பிடி மையங்கள் சோதனையிடப்பட்டன.
சட்டவிரோத சேவையை வழங்குவதாக நம்பப்படும் வளாகங்களை சோதனையிடுவதற்காக, 37 அதிகாரிகள் மற்றும் அமலாக்கப் பணியாளர்களை உட்படுத்தி, வியாழக்கிழமை இரவு இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, சிலாங்கூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் கைருல் அமினுஸ் கமாருடின் தெரிவித்தார்.
சட்டவிரோதக் குடியேறிகளாக மையத்தில் பணியாற்றிய 18 முதல் 47 வயதுக்குட்பட்ட, 11 பெண்கள் இச்சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.
குறிப்பாக அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், தாய்லாந்து மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்த நால்வர், இரு சீனர்கள் மற்றும் ஒரு வியட்நாமியர் ஆகியோர் முறையான ஆவணங்கள் இன்றி பணிபுரிந்து வந்ததும் உறுதி செய்யப்பட்டதாக அவர் அவ்வறிக்கையில் கூறினார்.
1959 / 1963-ஆம் ஆண்டு குடிநுழைவுத்துறை சட்டத்தின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)