Ad Banner
Ad Banner
 உலகம்

பொருளாதாரத் தாக்கத்தைக் குறைக்கத் தென் கொரியாவில் கூடுதல் வரவுசெலவுத் திட்டம்

11/04/2026 03:48 PM

சியோல், ஏப்ரல் 11 (பெர்னாமா) -- ஈரான் - அமெரிக்கா போரினால் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைப்பதற்காக, தென் கொரிய நாடாளுமன்றம் 1770 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான கூடுதல் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

போரினால் அதிகரிக்கும் மக்களின் சுமையை இந்த கூடுதல் நிதி குறைக்க இயலும் என்று தென் கொரிய அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

மார்ச் மாத இறுதியில் இந்த கூடுதல் வரவுசெலவுத் திட்டத்தை, அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.

2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்ற அதிபர் லீ ஜாய் முங்கின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இரண்டாவது கூடுதல் வரவுசெலவுத் திட்டம் இதுவாகும்.

எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தைக் குறைப்பதற்காக, இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் கூடிய விரைவில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

சுமார் முப்பது ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் எரிபொருள் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

தென் கொரியா தனது எரிசக்தி தேவைகளில் பெரும்பகுதியை பூர்த்தி செய்ய வெளிநாடுகளின் இறக்குமதியை அதிகமாக சார்ந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)