ஆப்கானிஸ்தான், 07 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆப்கானிஸ்தானில், கடந்த 10 நாள்களாக கனமழை, புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பலியானோரின் எண்ணிக்கை 200-ஆக உயர்ந்தது.
மேலும், 137 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த இயற்கை பேரிடரில், 793 வீடுகள் முழுமையாக அழிந்துள்ள நிலையில், 2,673 வீடுகள் சேதமடைந்துள்ளன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் 337 கிலோமீட்டர் சாலைகளையும் சேதப்படுத்தியுள்ளன.
வர்த்தகங்கள், விவசாய நிலங்கள், கிணறுகள் மற்றும் பாசன கால்வாய்களும் சேதமடைந்து, 5,800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]