அங்காசபூரி, ஏப்ரல் 01 (பெர்னாமா) -- சட்டத்தை மீறியதாகக் கருதப்படும் எந்தவொரு தனிநபர் மீதும் வழக்குத் தொடரும் முடிவு தேசிய சட்டத்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
மது மற்றும் போதைப்பொருளை உட்கொண்டு வாகனம் செலுத்தியதில் ஏற்பட்ட மரணம் குறித்து கருத்துரைக்கையில் தொடர்பு அமைச்சரும் மடானி அரசாங்கப் பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் அவ்வாறு தெரிவித்தார்.
அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் நடத்தும் விசாரணை, குற்றவியல் நடவடிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றும், சாலைப் போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழுள்ள பிற அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பதாக Datuk Fahmi விளக்கினார்.
"சட்டத்தை மீறியதாக நம்பப்படும் எந்தவொரு தனிநபர் மீதும் வழக்குத் தொடரும் முடிவு சட்டத்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டது. பி.டி.ஆர்.ர்ம் நடத்தும் விசாரணை, சாலைப் போக்குவரத்துச் சட்டங்களை மட்டுமல்லாமல், குற்றவியல் சட்டத்தின் பிற அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டது. மேலும், நடப்பில் உள்ள சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க உறுதியான ஆதாரம் இருப்பதாக தேசிய சட்டத்துறை கண்டறிந்தால், அதுவே வழக்குத் தொடர்வதற்கான அடிப்படையாக அமையும்," என்றார் அவர்.
இன்று, புதன்கிழமை அங்காசபூரியில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)