Ad Banner
Ad Banner
 விளையாட்டு

சீ விளையாட்டுப் போட்டி; ஆயத்தப் பணிகள் 80% நிறைவு

24/03/2026 04:12 PM

புத்ராஜெயா, 23 மார்ச் (பெர்னாமா) -- ஏழாவது முறையாக சீ விளையாட்டுப் போட்டியை மலேசியா ஏற்று நடத்துவுள்ள நிலையில், அதன் ஆயத்தப் பணிகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியின் ஆயத்தப் பணிகள் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டை எட்டியுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் முஹமட் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்தார்.

''வசதிகள் பொறுத்தவரை, நாங்கள் கிட்டத்தட்ட அந்த நிலையை அடைந்துவிட்டோம். 70 முதல் 80 விழுக்காடு பணிகள் கிட்டத்தட்டத் தயாராகிவிட்டன. மேலும் மிக முக்கியமானது என்னவென்றால், நிர்ணயிக்கப்பட்ட விளையாட்டுகள் அனைத்தும் குழு மட்டத்திலான விவாதத்தில் உள்ளன. எதிர்காலத்தில் அது கிட்டத்தட்ட 90 விழுக்காட்டை எட்டும் என்று நான் நினைக்கிறேன்,'' என்றார் அவர்.

அண்மையில் பெர்னாமா தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு சிறப்பு நேர்காணலில் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

34-வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 2027-ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டி, அடுத்த ஆண்டு செப்டம்பர் 18 தொடங்கி 29-ஆம் தேதி வரை சரவாக், கோலாலம்பூர், பினாங்கு மற்றும் ஜோகூரில் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா, சரவாக்கில் நடைபெறவுள்ள நிலையில், நிறைவு விழா கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)