Ad Banner
Ad Banner
 பொது

அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வானிலை ஆய்வாளர்களுக்கு டாக்டர் அஹ்மட் சாஹிட் பாராட்டு

23/03/2026 03:51 PM

கோலாலம்பூர், 23 மார்ச் (பெர்னாமா) -- துல்லியமான வானிலை தகவல்களைக் கண்காணித்து வழங்குவதன் மூலம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தங்களின் அர்ப்பணிப்பைக் காட்டி வரும் நாட்டின் அனைத்து வானிலை ஆய்வாளர்களுக்கும்,

2026 உலக வானிலை தினத்தை ஒட்டி, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தமது பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.

வெளியிடப்படும் ஒவ்வொரு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைக்கும் ஒரு முக்கிய நோக்கம் உண்டு என்றும், அது மக்களின் பாதுகாப்பு எப்போதும் பேணப்படுவதை உறுதி செய்வதே என்றும் அவர் கூறினார்.

"இன்று கண்காணிப்பு, நாளை பாதுகாப்பு" என்ற கருப்பொருளுக்கு ஏற்ப, இன்று எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்காலத்தில் மக்களின் உயிர்களையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதை உறுதி செய்வதில் வானிலை ஆய்வின் பங்கு மிகப்பெரியது என்று தேசிய பேரிடர் நிர்வகிப்புக் குழுவின் தலைவருமான டாக்டர் அஹ்மட் சாஹிட், தெரிவித்தார்.

உலக வானிலை ஆய்வு அமைப்பு, WMO-வில் மலேசியா உறுப்பினராக இணைந்த 68வது நிறைவு ஆண்டையும் அத்துறை கொண்டாடுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)