சிரம்பான், 23 மார்ச் (பெர்னாமா) -- நேற்றிரவு, நெகிரி செம்பிலான், சிரம்பான், ஜாலான் டத்தோ ஷெக் அஹ்மட்டில் உள்ள புத்தகக் கடை ஒன்று தீ விபத்தினால் பாதிக்கப்பட்டதை, அம்மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, ஜே.பி.பி.எம் உறுதிப்படுத்தியது.
இரவு சுமார் 9 மணிக்கு தீச்சம்பவம் ஏற்பட்டதாகவும், உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் நெகிரி செம்பிலான் மாநில ஜே.பி.பி.எம்-மின் மூத்த செயல்பாட்டு அதிகாரி முஹமட் ஹனாஃபி வாஹிட் கூறினார்.
சிரம்பான் மற்றும் சிரம்பான் 2 ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள், இரவு மணி 11.34-க்கு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக, முஹமட் ஹனாஃபி கூறினார்.
அதோடு, இரண்டு மாடிக் கொண்ட அக்கடையில் அதிக அளவிலான புத்தகங்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியதாக, நெகிரி செம்பிலான் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குர் சம்சுரி சைனோர்டின் தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், நெகிரி செம்பிலான், அம்பாங்கான், தாமான் புக்தியில் உள்ள ஒரு காட்டுப் பகுதி தீப்பிடித்து எரிந்ததாக, அம்மாநில ஜே.பி.பி.எம்-மின் தொடர்பு அதிகாரி முஹமட் ஷஸ்வான் தஜுடின் கூறினார்.
தீச்சம்பவம் குறித்து இரவு மணி 9-க்கு தங்கள் தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்ததாக, அவர் கூறினார்.
அக்காடு குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருந்தாலும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக முஹமட் ஷஸ்வான் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)