ஆராட், 22 மார்ச் (பெர்னாமா) -- இஸ்ரேலின் முதன்மை அணு ஆராய்ச்சி மையத்திற்கு அருகிலுள்ள தென் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் பலர் காயமடைந்தனர்.
இம்மோதலில், இஸ்ரேலின் அணு ஆராய்ச்சி மையம் குறிவைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
தென் பகுதியில் உள்ள டிமோனா மற்றும் ஆராட் நகரங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களைத் தங்களின் தற்காப்பு படையினரால் தடுக்க இயலவில்லை என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நான்காவது வாரத்தின் தொடக்கத்தில் அபாயகர திசையை நோக்கி இம்மோதல் சென்றுகொண்டிருந்த நிலையில், ஈரானின் நட்டான்ஸ் முதன்மை அணு ஆயுதச் மேம்பாட்டு தளம் தாக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]