Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நோன்பு பெருநாளை முன்னிட்டு 15 நாள்களுக்கு அதிகபட்ச விலைத் திட்டம்

15/03/2026 04:41 PM

கோத்தா கினபாலு, 15 மார்ச் (பெர்னாமா) --  இம்மாதம் கொண்டாடப்படும் நோன்பு பெருநாளை முன்னிட்டு மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி 15 நாள்களுக்கு அதிகபட்ச விலைத் திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று அறிவித்தார்.

அத்தியாவசியப் பொருள்களுக்கான விலைகளின் நிலைத்தன்மையை உறுதிச் செய்வதற்காக, நோன்பு பெருநாளுக்கு முன்பு மற்றும் பின்பு என ஏழு நாள்களுக்கு இத்திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக, பிரதமர் கூறினார்.

"உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கட்டுப்படுத்தப்படும் பொருள்களின் வகைகளை அடையாளம் கண்டுள்ளது. தீபகற்பத்தில் 24 பொருள்கள், சபா மற்றும் சரவாக்கில் 23 பொருள்கள் உட்பட லபுவான் கூட்டரசு பிரதேசத்தில் 22 பொருள்கள்", என்றார் அவர்.

இன்று, சபா கோத்தா கினபாலுவில் நடைபெற்ற 2026 உலக பயனீட்டாளர் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் அதனை கூறினார்.

இதனிடையே, தாய்லாந்தைத் தாக்கிய பெரும் வெள்ளத்தின் காரணமாக இறக்குமதி செய்யப்படும் சிவப்பு மிளகாய்களின் விலை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதால், அதற்கு பதிலாக உலர்ந்த மிளகாய்களைப் பயன்படுத்துமாறு அன்வார் மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)