புக்கிட் மெர்தாஜாம், 14 மார்ச் (பெர்னாமா) -- பள்ளி மற்றும் கல்விக் கழக அளவில் கூட்டுறவு இயக்கத்தை தொடக்கக் கட்ட வணிகப் பள்ளிகளாக வலுப்படுத்த தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சி மாணவர்களிடையே தொழில்முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வணிக உலகின் நுணுக்கங்களை மாணவர்கள் நடைமுறை ரீதியாக அறிந்துகொள்ளும் வகையில், இந்த முயற்சியை நனவாக்க, அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங், மலேசிய கூட்டுறவு ஆணையத்துடன் மேல் கலந்துரையாடலை நடத்தவிருக்கிறார்.
''அவருக்கு ஒரு பங்கை வழங்க நான் கூட்டுறவுத்துறைக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். சில நேரங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் கோப்பைகளையும் பதக்கங்களையும் வழங்குகின்றன என்பது எனக்குத் தெரியும். முடிந்தால், பள்ளியில் உள்ள கூட்டுறவு கழகங்கள், மாணவர்கள் கூட்டுறவு இயக்கத்தை அணுகுவதை ஊக்குவிக்க, அவர்களுக்கு ஒரு பங்கை வழங்க வேண்டும். ஏனெனில், கூட்டுறவுக் கழகங்கள் ஒரு வகையான வணிகமாகும்,'' என்றார் அவர்.
இன்று, பினாங்கும் செபெராங் பிறை போலிடெக்னிக் கூட்டுறவுக் கழகத்தில், ஷோப்பி சுய சேகரிப்பு மைய கூட்டுறவுத் திட்ட தொடக்க விழாவிற்கு முந்தைய நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)