Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

எண்ணெய் விநியோகம் நிலைத்திருக்க அரசாங்கம் தொடர் முயற்சி

13/03/2026 06:24 PM

புத்ராஜெயா, மார்ச் 13 (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, நாட்டின் எண்ணெய் விநியோக உத்தரவாதத்தை நீட்டிக்கவும், உள்நாட்டு விநியோகம் நிலையானதாக இருப்பதை உறுதி செய்யவும் அரசாங்கம் முயன்று வருகிறது.

வட்டார ரீதியில் புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வருவதால், எண்ணெய் விநியோகம் தொடர்பில் எவ்வித ஊகங்களும் வேண்டாம் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான்  பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

'''ஊகங்கள் வேண்டாம். ஊகம் எப்போதும் மிகவும் ஆபத்தான விஷயம் என்று நான் நினைக்கிறேன். அதில் லாபம் பெறுவது பெரும்பாலும் ஊகிப்பவர்கள்தான்.
எனவே, மேற்கு ஆசியாவில் முரண்பாடுகளும் மோதல்களும் இருக்கும் ஒரு இடத்தில், அங்கே நிறைய ஊகங்கள் உள்ளன. முக்கியமானது என்னவென்றால், நம் கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் நாம் கவனம் செலுத்துகிறோம். எனவே நம் கட்டுப்பாட்டில் உள்ளவை, நாட்டில் போதுமான அளவு விநியோகம் இருப்பதை உறுதி செய்கிறோம்,'' என்றார் அவர்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தபடி, நாட்டில் வரும் மே மாதம் வரை போதுமான எண்ணெய் விநியோகம் உள்ளது என்று அமீர் ஹம்சா கூறினார்.

இருப்பினும், தற்போதைய பயன்பாடுகளுக்கு ஈடாக கூடுதலானவற்றைப் பெற அரசாங்கம் இன்னும் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)