Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

துபாயில் உள்ள ஒரு கட்டிடத்தில் தாக்குதல்; ஆடவர் ஒருவர் பலி

08/03/2026 01:18 PM

துபாய், 08 மார்ச் (பெர்னாமா) --  ஈரான் அண்டை நாடுகள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தி வரும் வேளையில், ​​துபாயில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து புகை எழுவதை நேரில் கண்ட சாட்சியின் காணொளி காட்டுகிறது.

அல் பர்ஷா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலின் இடிபாடுகள் ஒரு வாகனத்தின் மீது விழுந்ததில் ஆசியானைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக துபாய் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியது.

முன்னதாக, ஒரு சிறிய தாக்குதல் சம்பவத்தை மேற்கோள் காட்டி எமிரேட்ஸ் விமான நிறுவனம், துபாய்க்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களை சற்று நேரம் நிறுத்தியது.

அதேவேளையில், துபாய் மரினாவில் உள்ள ஒரு கோபுரத்தின் முகப்பில் ஒரு சிறிய சம்பவம் ஏற்பட்டதாகவும், எனினும் இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, தங்கள் நாடு போர்க் காலத்தில் இருந்தாலும் சீராகவே செயல்படுவதாக ஐக்கிய அரபு சிற்றரசு அதிபர் ஷெக் முஹமட் சயெட் அல் நஹ்யான் தெரிவித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)