Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கட்சியில் மீண்டும் இணைய முன்னாள் உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கும் அம்னோ

06/03/2026 04:16 PM

கோலாலம்பூர், 06 மார்ச் (பெர்னாமா) --  உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியில் சேர்ந்து அதன் போராட்டத்தில் இணைய விரும்புபவர்களுக்கு அம்னோ அதற்கான வாய்ப்பை முழுமையாக வழங்குகிறது.

கருணையும் மன்னிப்பும் நிறைந்த ரமலான் மாதத்தில் அம்னோவின் பெரிய குடும்பத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்க, கடந்த கால தவறுகள் மற்றும் வேறுபாடுகள் அனைத்தும் முழுமையாக மன்னிக்கப்படுவதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.

இதன் தொடர்பில், அம்னோ அரசியலமைப்பு அடிப்படையில் தகுந்த நடைமுறைகளின் வழி அம்னோ உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தலைமையிலான Rumah Bangsa செயற்குழு உடனடியாக சம்பந்தப்பட்ட செயல்முறையை ஒருங்கிணைக்கவிருப்பதாக டாக்டர் அஹ்மட் சாஹிட் தெரிவித்தார்.

இம்முயற்சி மதம், இனம் மற்றும் நாட்டிற்கான போராட்டத்தின் திட்டங்களைத் தொடர்வது மற்றும் மக்களுக்கும் நாட்டிற்கும் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதில் கட்சியின் பலத்தை வலுப்படுத்தும் அம்சமாக இருக்கும்.

உறவுகளை மேம்படுத்தவும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும் அழைக்கும் புனித மாதத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்று, ரமலான் மாதத்தின் வாய்ப்பைப் பயன்படுத்தி கட்சியின் போராட்டத்தை மீண்டும் இணைக்க சிறந்த நேரமாக அம்னோ கருதுவதாகவும் டாக்டர் அஹ்மாட் சாஹிட் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)