ஜாலான் அம்பாங், 06 மார்ச் (பெர்னாமா) -- அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எந்தவொரு தரப்பினரும் அவ்வாறு செயல்பட முயற்சித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.
''இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அது காட்டுத்தீ போல் பரவிவிடும். மேலும், நமது நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை அழிக்க ஊடகங்களும் வெளி கட்சிகளும் பயன்படுத்தப்படுவதாக நினைக்கும் ஒருவரால் அரசியல் நிலைத்தன்மை பாதிக்கப்படக்கூடாது'', என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில், டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட்டுக்கும் FELDA உயர் நிர்வாகத்திற்கும் இடையிலான சந்திப்பில் கலந்து கொண்ட பிறகு அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இவ்விவகாரத்தை தற்போது அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் விசாரித்து வருவதாகவும், அனைத்து தரப்பினரும் அதிகாரிகள் முழுமையான விசாரணையை நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)