Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்தாலும் மலேசியப் பொருளாதாரம் மீள்தன்மையுடன் உள்ளது

06/03/2026 04:02 PM

கோலாலம்பூர், 06 மார்ச் (பெர்னாமா) --  மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களால் உலகளாவிய நிச்சயமற்றதன்மை அதிகரித்து வந்தாலும் மலேசியப் பொருளாதாரம் மீள்தன்மையுடன் உள்ளது.

இந்நிலையில், பேங்க் நெகாரா மலேசியா, பி.என்.எம்மும் மேம்பாடுகளை அணுக்கமாக கண்காணித்து வருகிறது.

நிலைமை நிச்சயமற்றதாகவும் வேகமாக மாறக்கூடியதாகவும் இருந்தாலும், மலேசியா இச்சவால்களை வலிமையான நிலையில் இருந்து எதிர்கொள்வதாக பி.என்.எம் ஆளுநர் டத்தோ ஶ்ரீ ரஷீட் கஃபார் கூறினார்.

அம்மோதல் உலகளாவிய பொருளாதார நிலைத்தன்மையின்மையை அதிகரித்துள்ள நிலையில், அதன் காலநீட்சியும் தீவிரமும் அதன் தாக்கத்தின் அளவை நிர்ணயிக்கும் என்பதால் எண்ணெய் விலைகள், சாத்தியமான வழங்கல் தடைகள் மற்றும் நிதி சந்தைகளில் ஏற்படும் அதிர்வுகளை பி.என்.எம், நெருக்கமாக கண்காணித்து வருவதாக அப்துல் ரஷீட் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை மோதல் தொடங்கியதில் இருந்து ஐந்து நாட்களுக்குள் கச்சா எண்ணெய் விலை 10 அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்து, பீப்பாய்க்கு 80 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.

உலகளாவிய நிதிச் சந்தைகளிலும் ஏற்ற இறக்கம் காணப்படுவதாகவும், இது ரிங்கிட் உட்பட பல நாணயங்களைப் பாதித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிச்சயமற்றத்தன்மை இருந்தபோதிலும், மலேசியாவின் வலுவான உள்நாட்டு வளர்ச்சி, மிதமான பணவீக்கம், நல்ல நிதி அமைப்பு மற்றும் மீள்தன்மை கொண்ட வெளித்துறைகளை ஆகியவை பொருளாதாரத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)