Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பெற்ற மகளிடம் பாலியல் தொந்தரவு; பாதுகாவலருக்கு 21 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள் 

04/03/2026 06:53 PM

ஜோகூர் பாரு, மார்ச் 04 - தமது ஆறு வயது மகளுக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகள் அளித்தது தொடர்பான 13 குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட பாதுகாவலருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 24 பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று, ஜோகூர் பாருவில் உள்ள இரண்டு வெவ்வேறு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் முடிவில் அத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

43 வயதான குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை இரு நீதிமன்றங்களும் ஏற்றுக்கொண்டு அரசுத் தரப்பு முன்வைத்த வழக்கின் உண்மைகளை ஆராய்ந்த பின்னர் நீதிபதிகள் மடிஹா சைனோல் மற்றும் நோர் அசியாத்தி ஜாஃபார் ஆகியோர் அத்தீர்ப்பை அறிவித்தனர்.

முதல் நீதிமன்றத்தில், குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 14 பிரம்படிகளையும், நீதிபதி மடிஹா விதித்தார்.

இதனிடையே, மற்றொரு நீதிமன்றத்தில் நீதிபதி நோர் அசியாத்தி, 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 பிரம்படிகளையும் விதித்தார்.

இருப்பினும், 13 குற்றங்களுக்கான சிறைத் தண்டனைகள் ஏககாலத்தில் நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)