கோலாலம்பூர், 03 மார்ச் (பெர்னாமா) -- உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் கச்சா எண்ணெயின் விலையேற்றத்தை எதிர்நோக்கிய போதிலும், எண்ணெய் ஏற்றுமதியை தற்போது நிறுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிடவில்லை.
அதோடு, உள்நாட்டு சந்தையைப் பாதுகாக்க, சில நாடுகள் அறிவித்த திட்டங்களைப் போன்ற எந்தவொரு திட்டமும் மலேசியாவிடம் இதுவரை இல்லை என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹமட் நாசிர் தெரிவித்தார்.
''இதுவரை, எங்களிடம் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை, ஆனால் நிச்சயமாக ஈரானில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அணுக்கமாகக் கவனித்து வருகிறோம்," என்றார் அவர்.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலையின் வளர்ச்சியையும், நாட்டின் பொருளாதாரம் மீதான தாக்கங்களையும் அரசாங்கம் தொடர்ந்து மதிப்பிட்டு வருகிறது.
இருப்பினும், எண்ணெய் ஏற்றுமதி தொடர்பான கொள்கைகள் உட்பட தற்போதைய கொள்கைகளில் கடுமையான மாற்றங்களைச் செய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அக்மல் நஸ்ருல்லா தெளிவுப்படுத்தினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]