லண்டன், 02 மார்ச் (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், ஆர்செனல் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் செல்சியை வீழ்த்தியது.
தற்போது லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆர்செனல் அதன் போட்டியாளரான மான்செஸ்டர் சிட்டியை விட ஒரு புள்ளி முன்னிலையில் உள்ளது.
ஆர்செனலின் முதல் கோல் வில்லியம் சலிபா மூலம் 21-வது நிமிடம் அடிக்கப்பட்ட வேளையில், கூடுதல் நிமிடத்தில் ஆர்செனல் அடித்த சொந்த கோலினால், முதல் பாதி ஆட்டம் 2-1 என்று நிறைவடைந்தது.
பின்னர், இரண்டாம் பாதி ஆட்டத்தில் 66-வது நிமிடம் ஆர்செனல் மற்றுமொரு கோல் அதன் வெற்றியை உறுதி செய்தது.
இதனிடையே, பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் Manchester United 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் கிரிஸ்டல் பேலஸ்e-சை வீழ்த்தி மூன்று புள்ளிகளைப் பெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)