Ad Banner
Ad Banner
 பொது

மத்திய கிழக்கு பதற்றம்; விளைவுகளை எதிர்கொள்ள மலேசியா தயாராக வேண்டும்

02/03/2026 03:19 PM

கோலாலம்பூர், 2 பிப்ரவரி (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் நிகழ்ந்து வரும் மோதலைத் தொடர்ந்து, இறக்குமதி பொருட்களின் அதிக விலையேற்றம் போன்ற தாக்கங்களை எதிர்கொள்ள, மலேசியா தயாராக இருக்க வேண்டும்.

வர்த்தக நாடான மலேசியா, அவ்வட்டாரத்தின் வான்வெளி வழியாக பல உயர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருவதாக மீடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத் தலைவர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தொடர்ந்து, அதன் வான்வெளி மூடப்பட்டபோது அல்லது கட்டுப்படுத்தப்பட்டபோது, சில மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள், திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக, தமது சமூக ஊடகக் கணக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியில் அவர் கூறினார்.

''பாதுகாப்பற்ற வான் வழித்தடங்கள் இருக்கும்போது, ​​விமானங்கள் திருப்பி விடப்படுகின்றன அல்லது ரத்து செய்யப்படுகின்றன. இதன் பொருள், ஐரோப்பாவிற்கான விமானப் பயணங்கள் நீண்ட தூரமாக இருக்கும். எரிபொருள் செலவுகள் அதிகமாக இருக்கும். மேலும் விமான சரக்கு தாமதமாகும் அபாயம் உள்ளது. எனவே ஏற்றுமதி தாமதமாகும் போது, ​​செலவுகள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும் போது விலைகளும் அதிகரிக்கும்,'' என்றார் தெங்கு சஃப்ருல்.

கடந்த சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதை அடுத்து மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)