அபு தாபி, மார்ச் 02 (பெர்னாமா) -- வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கு, கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், DBKL, விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.
நிதி நிர்வாகத்தில் டத்தோ பண்டாரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதும் அதில் அடங்கும்.
இதர ஊராட்சித் துறையை காட்டிலும், DBKL-இன் வரவு செலவுத் திட்டம் மிகப் பெரிதாக இருக்கும் நிலையில், செலவுகள் ஒரு தனிநபரை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த பல புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.
முந்தைய தனிப்பட்ட முடிவுகளுடன் ஒப்பிடும்போது, ஒவ்வொரு முடிவும் ஒரு குழுவின் மூலம் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படுவதை உறுதி செய்ய, கோலாலம்பூர் டத்தோ பண்டார் செலவின நிர்வாகத்தில் குறிப்பிட்ட அதிகார வரம்புகளை அறிமுகப்படுத்த முன்முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.
"முன்பு, டத்தோ பண்டார்தான் பணத்தை செலவு மற்றும் தணிக்கைகளை செய்தார். இப்போது நிலை வேறு. இந்த தணிக்கைக்கு வேறொருவரை நியமித்து, மற்றொரு பொறுப்பை அவர் எடுத்துக் கொள்கிறார். இதனால், வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் செயல்படுகிறார்," என்றார் அவர்.
இன்று, மேலவையில், DBKL-இன் பொறுப்புகள் மற்றும் ஊராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்து Senator Tuan Robert Lau Hui Yew எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)