புத்ராஜெயா, 01 மார்ச் (பெர்னாமா) -- அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாற்ற வழிவகுத்துள்ளதோடு அதன் விநியோகத்திலும் இடையூறு ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
இந்த பதற்றங்கள் அதிகரிக்கும் அபாயத்திற்கு முன்பே தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக SPI சொத்து நிர்வகிப்பு நிர்வாக பங்காளியான ஸ்டீபன் இன்ஸ் தெரிவித்தார்.
பொதுவாக, எண்ணெய் விலையில் ஒவ்வொரு விழுக்காட்டு அதிகரிப்புக்கும் தங்கத்தின் விலை சுமார் 0.20 முதல் 0.35 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று Innes தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில், தங்கம் விலை சுமார் 125-இல் இருந்து 220 அமெரிக்க டாலர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)