Ad Banner
Ad Banner
 பொது

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் போலீஸ் உதவி அதிகாரிகள் மீது நடவடிக்கை 

01/03/2026 01:15 PM

பச்சோக், மார்ச் 01 (பெர்னாமா) -- கெடா, செர்டாங்கில் உள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையம், Puspen-இல் 47 பேருக்கு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம், AADK-வின் இரண்டு போலீஸ் உதவி அதிகாரிகள் நாளை ஒழுங்குமுறை வாரியத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சம்பந்தப்பட்ட செயலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவ்விரு உறுப்பினர்களும் செர்டாங் மறுவாழ்வு மையத்திலிருந்து நீக்கப்பட்டு, கெடா, AADK-விற்கு மாற்றப்பட்டப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து விசாரணை செயல்முறை தொடங்கப்பட்டதாக தேசிய போலீஸ் படை தலைவர்  டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் வெளியிட்ட அண்மைய அறிக்கையை சைஃபுடின் நசுத்தியோன் சுட்டிக்காட்டினார்.

புகாரின் நோக்கத்தையும், விசாரணையின் இறுதி முடிவையும் அடையாளம் காண்பது முக்கியம் என்று அவர் விவரித்தார்.

அரசாங்கத்தை கவிழ்க்கவும், நாட்டின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கவும், அனைத்துலக ஊடக நிறுவனத்துடன் இணைந்து செல்வாக்கு மிக்க உள்நாட்டவர் ஒருவர் முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தமது தரப்பு புகார் பெற்றதாக முஹமட் காலிட் முன்னதாக தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)