Ad Banner
Ad Banner
 உலகம்

பொலிவியா; ரொக்கப் பணங்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலி

28/02/2026 12:05 PM

எல் ஆல்டோ, 28 பிப்ரவரி (பெர்னாமா) -- பொலிவியாவில் மத்திய வங்கியிலிருந்து புதிதாக அச்சிடப்பட்ட ரொக்கப் பணங்களை ஏற்றிச் சென்ற அந்நாட்டின்  விமானப்படையின் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இதுவரை 15 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 30 பேர் காயமடைந்தனர்.

தலைநகர் லா பாஸ்க்கு அருகிலுள்ள எல் ஆல்டோ எனும் நகரில் உள்ள சாலையில் நேற்று விழுந்து விபத்துக்குள்ளானது.

ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற அந்த விமானம், தீப்பிடித்து அருகில் இருந்த நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.

பலியானவர்களில் விமான ஊழியர்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் அடங்குவர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]