Ad Banner
Ad Banner
 பொது

மாமன்னர் பிரதமரைச் சந்தித்தார்

24/02/2026 04:18 PM

கோலாலம்பூர், 24 பிப்ரவரி (பெர்னாமா) --  மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்தார்.

அச்சந்திப்பின்போது, மத்திய அரசாங்கத்தின் நிர்வாக விவகாரங்களில் உள்ள அண்மைய முன்னேற்றங்கள் குறித்த விளக்கமளிப்பு மற்றும் தேசிய நலன் சார்ந்த தற்போதைய பிரச்சனைகள் குறித்த கலந்தாலோசிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இன்று, புக்கிட் துங்கு இஸ்தானாவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனான சந்திப்பு நடைபெற்றதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் முகநூலில் பதிவில் வெளியிடப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)