Ad Banner
Ad Banner
 உலகம்

வியூக ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலிலிருந்து வியட்நாமை நீக்க டிரம்ப் உறுதி

22/02/2026 04:12 PM

வியட்நாம், 22 பிப்ரவரி (பெர்னாமா) --  வியட்நாமை முக்கிய ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து உடனடியாக நீக்குமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தார்.

வாஷிங்டனில், வெள்ளிக்கிழமை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோ லாம் உடனான சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, வியட்நாம்-அமெரிக்கா உடனான விரிவான வியூக கூட்டமைப்பானது, நிலையான, கணிசமான மற்றும் பயனுள்ள முறையில் வளர்ச்சி பெறுவதற்கான ஹனோய் அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தோ லாம் தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளும் வட்டாரங்களுக்கான பரிமாற்றங்களையும், உயர் மட்ட தொடர்புகளையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்திருந்தார்.

சமசீர் நலன்களின் அடிப்படையில், இரு தரப்பினரின் நிலைமைகள் மற்றும் சட்டபூர்வமான நலன்களுக்கு ஏற்ப இரு நாடுகளின் வணிகங்கள் மற்றும் மக்களின் நலனுக்காக நிலுவையில் உள்ள பிரச்சனைகள் குறித்து நேர்மையான கலந்தாலோசிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

மேலும், இருதரப்பு வர்த்தகத்தை சமநிலைப்படுத்த வியட்நாம் மேற்கொண்ட முயற்சிகளை டிரம்ப் பாராட்டியதுடன், பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட மதிப்புமிக்க ஒப்பந்தங்களையும் வரவேற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)