செராஸ், பிப்ரவரி 21 (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கியிஇன் பங்கு உரிமை குறித்த வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக வாக்குமூலங்களைப் பதிவு செய்ய பலர் அழைக்கப்படவிருப்பதாக அனைத்துலக ஊடகம் Bloomberg தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு அழைக்கப்படவிருப்பவர்களின் விவரங்களை வெளியிடாத தேசிய போலீஸ் படை தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில், விசாரணை அறிக்கையை தங்கள் தரப்பு விரைவில் தேசிய சட்டத்துறையிடம் சமர்ப்பிக்கும் என்று கூறினார்.
"விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பி.டி.ஆர்.எம் விசாரணை நடத்தி வருகிறது. அதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பல அறிக்கைகள் சேகரிக்கப்படும். நாங்கள் அவ்வப்போது சரிபார்ப்போம். எங்கள் விசாரணை அறிக்கை விரைவில் ஏ.ஜி-யிடம் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார் அவர்.
முன்னதாக, டான் ஶ்ரீ அசாம் மீது அவதூறான கருத்துகளைக் கொண்ட Bloomberg-இன் அறிக்கை குறித்து ஒரு போலீஸ் புகார் பெற்றுள்ளதையும் அதன் தொடர்பில் விசாரித்து வருவதையும் அரச மலேசிய போலீஸ் படை உறுதிப்படுத்தியது.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை, வழக்கு அல்லது சட்டப் பிரிவின் கீழ் உள்ள வகைப்படுத்தப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதாக அதன் இயக்குநர் டத்தோ எம் குமார் தெரிவித்துள்ளார்.
அவதூறு பரப்பியதற்காக குற்றவியல் சட்டம் செக்ஷன் 500-இன் கீழ் இவ்வழக்கு குறித்து விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)