கோலாலம்பூர், பிப்ரவரி 17 (பெர்னாமா) -- நாடு முழுவதும் சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும் பேரசிரியார் ராஜா சரித் சோஃபியாவும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வு நிறைந்த சூழலில் சீனப் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்று மாமன்னர் தமது முகநூலில் பதிவேற்றிய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சீனர்களின் சந்திர நாள்காட்டியின் படி, பிறந்திருக்கும் குதிரை ஆண்டு அவர்களின் நம்பிக்கையில் உற்சாகம், விடாமுயற்சி மற்றும் முன்னேற்றத்தை குறிக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)