Ad Banner
Ad Banner
 பொது

KLSCAH பாதுகாப்பை ஆராய செயற்குழு உருவாக்கம்

17/02/2026 07:39 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 17 (பெர்னாமா) -- கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன வர்த்தக சம்மேளன மாநாட்டு மண்டபம், KLSCAH-வில் இன்று காலை நடைபெற்ற சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திலும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

KLSCAH பாதுகாப்பிற்கான முயற்சிகளை ஆய்வு செய்து ஒருங்கிணைக்க, ஒரு செயற்குழுவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

சுமார் நூறு ஆண்டுகள் பழையான கட்டடத்தின் தேவைகளை இந்நடவடிக்கை கணக்கில் எடுத்துக் கொள்வதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லீ காங், சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர்: டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங், கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ ஆகியோரும் வருகைப் புரிந்திருந்தனர்.

ஒன்றாக இணைந்து உணவு உண்ணும் லூ சங் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டப் போது, நாட்டு மக்களின் அன்பும் ஒற்றுமையும் அங்கு பிரதிபலித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)