கோலாலம்பூர், பிப்ரவரி 17 (பெர்னாமா) -- பல்லின மக்களிடையே இருக்கும் ஒற்றுமை மற்றும் சகிப்புதன்மை இல்லாமல், நமது நாடு எதிர்பார்க்கும் வெற்றியை அடைய முடியாது.
குறிப்பாக இனவாத கருத்துகள் மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்வதில், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையும்
சமரசபோக்கும் அவசியமாகிறது.
நாட்டின் தேசிய இலக்கை அடைவதற்கு, இதுநாள் வரை மலேசியர்கள் அனுபவித்து வரும் அமைதியும் மக்களின் ஒற்றுமையும் தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்று, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''உதாரணத்திற்கு, கடந்தாண்டு மற்றும் இவ்வாண்டு புள்ளிவிவரங்களிலிருந்து நாம் காண்கிறோம். இந்த அண்மைய புள்ளிவிவரங்கள் நாம் பெருமைப்படுவதற்கு அப்பாற்பட்ட முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளோம் என்பதைக் காட்டுகின்றன. இது அனைத்துத் தரப்பினர், அனைத்து மக்கள், அனைத்து இனங்கள், அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள், வியாபாரிகள் என அனைவரின் ஒத்துழைப்பால் ஏற்பட்டது,'' என்றார் அவர்.
இவ்வாண்டு, குதிரை ஆண்டாக சீன சமூகம் கொண்டாடும் நிலையில், அதில் உள்ள உறுதி, நம்பிக்கை, சகிப்புத்தன்மை மற்றும் சுறுசுறுப்பு போன்றவை நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து, வெற்றியை வலியுறுத்துவதற்கான முக்கிய அடிப்படைகளை குறிப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
இது பொருளாதார மற்றும் மேம்பாட்டு அம்சங்களாக மட்டுமல்லாமல், சமூகத்தினரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)