Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அசாம் பாக்கியின் விசாரணை; சிறப்பு செயற்குழுவிடம் ஒப்படைப்பு

16/02/2026 03:16 PM

ஜோகூர் பாரு, 16 பிப்ரவரி (பெர்னாமா) --  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கியின் பங்கு உரிமைப் பிரச்சனை தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு, அரசாங்கம் ஒரு சிறப்பு செயற்குழுவிடம் ஒப்படைத்துள்ளது.

ஒரு சிறப்பு செயற்குழுவை அமைக்கும் முடிவின் மூலம் அமைச்சரவை அவ்விவகாரம் குறித்த கருத்தை தெரிவித்திருப்பதாக மடானி அரசாங்கத்தின் பேச்சாளரும் தொடர்பு அமைச்சருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

''எனவே எங்களைப் பொறுத்தவரை, விசாரணை நடத்துவதை அந்த செயற்குழுவிடம் ஒப்படைத்து விட்டோம். முழு விசாரணை நடத்தட்டும். மேலும், டான் ஸ்ரீ அசாம் விசாரணைக்கு தயாராக இருப்பதாக மிகவும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்'', என்றார் அவர்.

இன்று, ஜோகூர் பாருவில், 14-வது 2026 Jelajah Ramadan நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் ஃபஹ்மி அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)