Ad Banner
 பொது

பெண்ணின் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டு கொலை; இரு ஆடவர்கள் கைது

13/02/2026 02:22 PM

கோத்தா கினபாலு, 13 பிப்ரவரி (பெர்னாமா) --  சபா, இண்டா பெர்மாய் பகுதியில், நேற்று அதிகாலை ஒரு பெண்ணின் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டு பல இடங்களில் வீசப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்கள் என்று நம்பப்படும் இரு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில், 70 வயதுடைய சந்தேக நபர் மாலை 5 மணிக்கு கைதான வேளையில், அவரின் 20 வயது மகன் நேற்றிரவு 11 மணிக்கு செபங்காரில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடண்டன் சைட் லோட் சைட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் புக்கிட் அமான் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பிறகு அவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக சுப்ரிடண்டன் சைட் லோட் கூறியுள்ளார்.

அதோடு, D8 ஜே.எஸ்.ஜே ஐ.பி.கே மற்றும் லுயாங் போலீஸ் நிலைய குற்றத் தடுப்பு ரோந்துப் பிரிவின் தொழில்நுட்ப உதவியுடன் சபா போலீஸ் தலைமையகக் குற்றப் புலனாய்வுத் துறையின் கூட்டு முயற்சியாலும் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் குறித்து, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

பொறாமையினால், இந்த அசம்பாவிதம் நேர்ந்திருக்காலம் என்று நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)