Ad Banner
 உலகம்

பாகிஸ்தானில் 5 போலீசார் பயங்கரவாதிகளால் கொலை

12/02/2026 07:57 PM

பாகிஸ்தான், 12 பிப்ரவரி (பெர்னாமா) -- பாகிஸ்தானில் அதிகரித்து வரும் இஸ்லாமிய வன்முறையுடன் போராடி வரும் நிலையில், நேற்று, புதன்கிழமை வடமேற்கு பாகிஸ்தானில் ஐந்து போலீஸ் அதிகாரிகளை பயங்கரவாதிகள் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டேரா இஸ்மாயில் கான் நகரின் புறநகர் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு திரும்பியபோது அவர்கள் தாக்குதலுக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்தனர்.

காட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிலடி தாக்குதலில் போலீசார் நான்கு தீவிரவாதிகளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக டேரா இஸ்மாயில் கானில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு காயமடைந்த அதிகாரிகள் வாகனங்களில் கொண்டுச் செல்லப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இத்தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)