Ad Banner
 பொது

வெப்பம்: கெடாவில் 5 பகுதிகளில் எச்சரிக்கை நிலை

11/02/2026 05:39 PM

கோலாலம்பூர், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- தீபகற்ப மலேசியாவில் நிலவி வரும் வெப்பமான வானிலையால் கெடாவில் ஐந்து பகுதிகள் எச்சரிக்கை நிலையில் உள்ளன.

கெடாவின் பொக்கொக் செனா, பெண்டாங், பாலிங், பாடாங், தெராப் மற்றும் கூலிம் ஆகிய பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து மூன்று நாள்களுக்கு 35 முதல் 37 பாகை செல்சியஸ் வரை வெப்பமான வானிலை நிலவினால் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்படும் என்று மெட்மலேசியா தனது முகநூலில் பதிவிட்டுள்ளது.

வெப்பமான வானிலை குறித்த அண்மையத் தகவலுக்கு பொதுமக்கள் மெட்மலேசியா அகப்பக்கத்தை நாடலாம்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]