Ad Banner
 பொது

போர்ட் கிள்ளான் ஈ.சி.ஆர்.எல்: அடுத்தாண்டு இறுதிக்குள் நிறைவடையும்

11/02/2026 05:34 PM

குவாந்தான், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- கிழக்குக்கரை ரயில் பாதைத் திட்டம், ஈ.சி.ஆர்.எல் போர்ட் கிள்ளானில் உள்ள ஜாலான் கஸ்தாம்-ஐ இணைக்கும் இரண்டாம் கட்டத்தின் அமலாக்கத்துடன் தொடரப்படும்.

2027-ஆம் ஆண்டு டிசம்பரில் அதன் கட்டுமானம் முழுமையாக நிறைவடையும்.

இந்த நீட்டிப்பு ஈ.சி.ஆர்.எல்-இன் வியூக கட்டமைப்பை, துறைமுகப் பகுதி வரை முழுமையாக நிறைவு செய்வதோடு கிழக்கு கடற்கரை வழித்தடத்திற்கும் நாட்டின் முக்கிய பரிமாற்ற மையத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

''கோம்பாக் மற்றும் ஜாலான் கஸ்தாம் இடையிலான இரண்டாவது கட்டமாக அது இருக்கும். கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கோம்பாக் முதல் கோத்தா பாரு வரை முதலில் முடிக்கப்படும். பின்னர், கோம்பாக் முதல் போர்ட் கிள்ளானில் உள்ள ஜாலான் கஸ்தாம் வரை முடிக்கப்படும்,'' என்றார் அவர். 

இன்று, குவாந்தான் கோத்தா எஸ்.ஏ.எஸ் நிலையத்தில் ஈ.சி.ஆர்.எல் திட்டத்திற்கான மின்சார ரயில் பெட்டிகள், ஈ.எம்.யூ மற்றும் மின்சார ரயில் இயந்திரத்தின் வருகையை தொடக்கி வைத்து, ஈ.சி.ஆர்.எல் வழித்தடத்திற்கான தொடர்பு உள்கட்டமைப்பு வழங்குநருக்கான நியமனக் கடிதத்தையும் வழங்கிய பின்னர் லோக் அவ்வாறு கூறினார்.

50,270 கோடி ரிங்கிட் மதிப்பிலான தேசிய உள்கட்டமைப்பு திட்டம், தற்போது மிகவும் முக்கியமான கட்டத்தில் நுழைவதை அது குறிக்கிறது.

கடந்த ஜனவரி வரையில், அத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 91.7 விழுக்காடு நிறைவடைந்துள்ளன.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]