Ad Banner
 பொது

வழிபாட்டுத் தலங்கள் கட்டுமானம்; பேச்சுவார்த்தை & கலந்தாலோசிப்பு மூலம் தீர்க்கப்பட வேண்டும்

11/02/2026 05:28 PM

கோலாலம்பூர், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான எந்தவொரு விவகாரமும் அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாலோசிப்பு மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு வலியுறுத்துகின்றது.

நியாயமான, இணக்கமான மற்றும் சட்ட அடிப்படையிலான தீர்வை அடைவதை நோக்கமாகக் கொண்டு ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை செயல்முறைக்கு அமைச்சு முழு வாய்ப்பு வழங்குவதாகவும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள அனுமதியற்ற வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தைத் தீர்க்க தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் முஹமட் ஹனிஃப் கத்ரி அப்துல்லாவின் பரிந்துரைக்கும் அமைச்சு ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான எந்தவொரு விவகாரமும் சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அது அரசியலாக்கப்படக்கூடாது என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் கருத்தையும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு வரவேற்கின்றது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]