Ad Banner
 உலகம்

மசூதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு உதவிய நால்வர் கைது

08/02/2026 02:25 PM

இஸ்லாமாபாத், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- மசூதி ஒன்றில் ஒரு நாளுக்கு முன்பு 32 பேரைக் கொன்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்காரருக்கு உதவியதாக நம்பப்படும் நால்வரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், பெஷாவார் மற்றும் நௌஷேராவில் நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் பின்னணியில் முதன்மையாக செயல்பட்டதாகக் கூறப்படும் நபரும் அடங்குவார் என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஷின் நக்வி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை, இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா முஸ்லிம் மசூதியான கதிஜா துல் குப்ரா இமாம்பர்காவின் வளாகத்தில் ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு வெடிகுண்டையும் வெடிக்கச் செய்ததில் 32 பேர் கொல்லப்பட்ட வேளையில் 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், அந்நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும், முக்கியமான இடங்களுக்குச் செல்லும் அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளிலும் போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]