Ad Banner
 உலகம்

மெல்பர்னில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை திருடப்பட்டது

06/02/2026 02:04 PM

மெல்பர்ன், பிப்ரவரி 06 (பெர்னாமா) -- ஆஸ்திரேலியா மெல்பர்னில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை கடந்த மாதம் திருடப்பட்டது.

இந்நிலையில், அச்சிலை இயந்திரத்தின் வழி வெட்டி எடுக்கப்பட்டு களவாடப்பட்டதாக அச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸ் நேற்று தெரிவித்தது.

சுமார் 420 கிலோகிராம் எடையுள்ள அந்த வெண்கலச் சிலை, தென்கிழக்கு மெல்போர்னில் உள்ள ஆஸ்திரேலிய இந்திய சமூக மையத்தின் வெளிபுறத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஜனவரி 12-ஆம் தேதி, அச்சிலை திருடப்பட்டதை தொடர்ந்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அச்சிலையை, 2021-ஆம் ஆண்டு, அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison திறந்து வைத்தார்.

-- பெர்னாமா


பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)