Ad Banner
 பொது

சீர்திருத்தங்கள் மூலம் ஈட்டப்படும் நிதியை வெறுமனே ‘இழந்து விடாமல்’, இருப்பதை அரசாங்கம் உறுதி செய்கிறது

04/02/2026 05:42 PM

ஜாலான் பார்லிமன், பிப்ரவரி 4 (பெர்னாமா) -- சீர்திருத்தங்களின் மூலம் ஈட்டப்படும் நிதியை, வெறுமனே ‘இழந்து விடாமல்’, அதனை மக்களுக்கு திரும்ப வழங்குவதில் அரசாங்கம் எப்போதும் உறுதியாக செயல்படுகிறது.

மாறாக, அந்நிதி இலக்கிடப்பட்ட உதவி மற்றும் நியாயமான உதவித்தொகை மூலம் மக்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படுகிறது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் தேசிய மேம்பாட்டிற்கான செலவினங்களை அதிகரிக்க அரசாங்கத்திற்கு நிதி வாய்ப்பை, நிதி சீர்திருத்தங்கள் உருவாக்கியுள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர், டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.

''ஊழலை எதிர்த்துப் போராடுதல், அரசு கொள்முதலை சீர்திருத்துதல், நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல் மற்றும் இலக்கிடப்பட்ட உதவித் தொகையை செயல்படுத்துதல் உள்ளிட்ட துணிச்சலான, பிரபலமற்ற சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது,''  என டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.

செயல்படுத்தப்பட்ட நிதி சீர்திருத்தங்களின் கீழ், நிதிப் பற்றாக்குறையை 2021-இல் 6.4 விழுக்காட்டிற்கும், 2022-இல் 5.5 விழுக்காட்டிற்கும், 2023-இல் 5 விழுக்காட்டிற்கும், 2024-இல் 4.1 விழுக்காட்டிற்கும் குறைப்பதில் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது.

2025-ஆம் ஆண்டில், நிதி பற்றாக்குறை 3.8 விழுக்காட்டு இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இவ்வாண்டு வரவு செலவுத் திட்ட அடிப்படையில், நிதி பற்றாக்குறை 3.5 விழுக்காடாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)